தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருங்கால முதல்வர் ரஜினி: ஆடித்தீர்க்கும் ரசிகர்கள்! - வருங்கால முதல்வர் ரஜினி

“2021இல் த‌மிழ‌க‌ முத‌ல்வரே” என ரஜினி ரசிகர்கள் கொடைக்கான‌ல் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

kodaikanal rajini poster viral
kodaikanal rajini poster viral

By

Published : Dec 11, 2020, 12:40 AM IST

திண்டுக்கல்: 2021ல் முதலமைச்சர் ரஜினி என்று ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ந‌டிக‌ர் ர‌ஜினிகாந்த் அரசியல் க‌ட்சி தொடங்குவ‌து குறித்து ப‌ல்வேறு க‌ட்ட‌ ஆலோச‌னைக‌ள் ந‌ட‌த்தி வ‌ருகிறார். க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன்பு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 31ஆம் தேதி க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து குறித்து அறிப்பேன் என‌ கூறியிருந்தார். க‌ட்சி தொடங்கி, 2021ஆம் ஆண்டு நடைபெறும் ச‌ட்ட‌ப்பேரவை தேர்த‌லில் போட்டியிடுவ‌தாக‌வும், ஆனால் முத‌லமைச்சர் வேட்பாளர் நான் இல்லை என‌வும் கூறியிருந்தார்.

இச்சூழலில், டிசம்பர் 12ஆம் தேதி ர‌ஜினிகாந் தனது 71ஆவ‌து பிற‌ந்த‌ நாளை கொண்டாடயுள்ளார். இத‌னை கொண்டாடுவ‌த‌ற்கு ர‌ஜினியின் ர‌சிக‌ர்க‌ள் ஆயத்த‌மாகி வ‌ருகின்ற‌ன‌ர். இதில் ஒரு க‌ட்ட‌மாக‌ கொடைக்கான‌லில் ர‌ஜினி ம‌க்க‌ள் ம‌ன்ற‌ம் சார்பில், “71ஆவ‌து பிற‌ந்த‌நாள் காணும் ம‌க்க‌ளின் முத‌ல்வ‌ரே” என‌வும் “2021ல் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரே” என‌வும் "இப்போ இல்லேன்னா எப்ப‌வும் இல்ல‌ " மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என‌ கொடைக்கான‌லில் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள‌ன‌ர்.

முத‌லமைச்சர் வேட்பாள‌ர் தான் இல்லை என‌ ர‌ஜினி தெரிவித்திருந்த‌ நிலையில், கொடைக்கான‌லில் இவ்வாறாக‌ ரசிகர் தரப்பில் இருந்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details