தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கொடைக்கானல் பொதுமக்கள்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய உதவியாளர்கள் இல்லாததால் சிகிச்சைப் பெற அங்கு வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை குறித்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்த கொடைக்கானல் பொதுமக்கள்!
அரசு மருத்துவமனை குறித்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்த கொடைக்கானல் பொதுமக்கள்!

By

Published : Jun 7, 2021, 6:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், போதிய உதவியாளர்கள் இல்லாததால் சிகிச்சைப் பெற அங்கு வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறியதாவது:

கொடைக்கானல் மக்களின் கோரிக்கை

"கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராம மக்களும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெரும் நிலை உள்ளது.

தொடர்ந்து விபத்து, அவசர சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும்பொழுது உதவியாளர்கள் யாரும் இல்லாத சூழலில் செவிலியர்களே அவர்களை அழைத்துச் சென்று உரிய வேலைகளைப் பார்க்கும் நிலையும், வேறு தேவைகளுக்கு சிகிச்சைப் பெற வரும் மக்கள் உதவியாளர்கள் இல்லாத நிலையில் அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது.

எனவே இங்கு சிகிச்சைப்பெற வரும் மக்களுக்கு மருத்துவ உதவியாளர்களை தமிழ்நாடு அரசு உடனே நியமிக்க வேண்டும்" என கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details