தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் நகர்ப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பீதியில் மக்கள் - Kodaikanal chettah attack

திண்டுக்கல் : கொடைக்கானல் நகர்ப் பகுதியில் சிறுத்தையின் கால் தடம், இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

kodaikanal cheetah
kodaikanal cheetah

By

Published : May 17, 2020, 12:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, பாக்கியபுரம் ஆகியப் பகுதிகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உறுமல் சத்தத்துடன் சிறுத்தை உலாவருவதாக அப்பகுதி மக்கள் கொடைக்கானல் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இரவு நேரத்தில் வருவது சிறுத்தையாக இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் பயங்கர உறுமல் சத்தம் கேட்டுள்ளது. கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் சாலைப் பகுதியில், காட்டுப்பன்றியைச் சிறுத்தை வேட்டையாடி உள்ளது. இந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால் தடத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

144 தடை உத்தரவு காரணமாக, சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுவதால் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலாவருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் மக்கள், சிறுத்தையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரைபிள் ரேஞ்ச் சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலடித் தடம் பற்றி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தடம் வேறு ஏதேனும் விலங்குகளின் தடமாகவும் இருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். விலங்குகள் நடமாட்டத்தைக் கவனிக்க, இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்!

ABOUT THE AUTHOR

...view details