தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலுக்கு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம் - கொடைக்கானல் பேருந்து பயணிகள்

திண்டுக்கல் : கொடைக்கானலுக்கு இயக்கப்படும் பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயம் கொடைக்கானல் முகவரி கொண்ட அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'கொடைக்கானல் பேருந்தில் செல்லும் பயணிகள் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்'- கொடைக்கானல் கிளை மேலாளர் அறிவிப்பு!
Kodaikanal bus

By

Published : Sep 1, 2020, 10:29 PM IST

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. ஆனால், இம்முறை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகள் மாவட்டத்திற்குள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 150 நாள்களுக்குப் பின் இன்று (செப். 1) பேருந்து இயக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு பகுதியில் உள்ள திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இதனிடையே தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளை பேருந்தில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் விதமாக பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், கொடைக்கானல் முகவரி கொண்ட அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே பேருந்தில் அனுமதிக்கப்படுவர் என கொடைக்கானல் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ”பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தகுந்த இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். பயணிகளுக்கு நடத்துனர் இவற்றை அறிவுறுத்த வேண்டும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details