திண்டுக்கல்: கொடைக்கானலில் பெய்து வந்த மழையால் ஓராவி அருவியில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 10 கிமீ தொலைவில் பள்ளங்கி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கோம்பை என்னும் பகுதிக்குச் செல்லும் வழியில், ஓராவி அருவி அமைந்துள்ளது.
கொடைக்கானலில் புரெவி புயல் எதிரொலியாக சில நாட்களாக கனமழையும், அவ்வபோது மிதமான மழையும் பெய்துவந்தது. இதனால் நீர் வீழ்ச்சிகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மழை காரணமாக பள்ளங்கி கோம்பை பகுதியில் அமைந்துள்ள ஓராவி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஓராவி அருவியில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர் பசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே இந்த அருவி அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. மேலும், இப்பகுதியைச் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.