திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளது. இது 1912ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது.
இந்த காய்கறி சந்தையில் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
ஆனால் தற்போது இங்கு இயங்கிவரும் கடைகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், துப்பரவு பணியாளர்களும் இங்குவந்து சுத்தம் செய்வதில்லை.
இதனால், காய்கறி கடை உரிமையாளர்கள் நகராட்சி குப்பை வண்டிகள் வரும்போது தாங்களே கழிவுகளை அகற்றி கொட்டுகின்றனர்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் காய்கறி சந்தை
கடந்த 10 ஆண்டுகளாக இந்த சந்தையை ஆய்வு செய்ய நகராட்சி அலுவலர்கள் வரவில்லை.
இதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள மார்கெட்டை உடனடியாக நகராட்சி புதுப்பித்துத் தரவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த சந்தை சுத்தமின்றி காணப்படுவதால் நாளுக்கு நாள் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவை வேண்டும் என சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:500 ஆண்டுகள் பழமையான நாவல் மரம்... அருகில் சென்ற பார்க்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் வேதனை!