திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சண்முகதாய் என்பவரின் வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது.
இதன் காரணமாக, அருகிலிருந்த குடிசை வீடுகள் மீது தீ மளமளவென பரவி பற்றியெரிந்தது. இதில், எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து அனைத்து பொருள்களும் நாசமாகின. இதைத் தொடர்ந்து, தீப்பற்றி குடிசை வீடுகள் எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.