தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஹெலிபேட்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் ஹெலிபேட் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட வருவாய்அலுவலர் ஆய்வுமேற்கொண்டார்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஹெலிபேட்
கொடைக்கானல் மலைப் பகுதியில் ஹெலிபேட்

By

Published : Jun 5, 2021, 6:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஹெலிபேட் அமைப்பதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பிரேம்குமார் ஆய்வுமேற்கொண்டார்.

கொடைக்கானல் சின்னபள்ளம், ரைபிள் ரேஞ்ச் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வுசெய்தார். இதில் நான்கு இடங்கள் தற்போதைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெலிபேட் அமைப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு அவ‌ச‌ர‌ தேவைகளையும், மேம்பாட்டுப் பணிகளை இதன் மூலம் செய்ய வாய்ப்பு உள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு இது பற்றிய அறிக்கை அரசிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details