திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்துவருகிறது. தொடர்ந்து சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் விதமாக ஹெலிகாப்டர் இறங்கு தலம் அமைக்கவேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது .
கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தலம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Dindugul latest news
கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
![கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தலம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு KODAIKANAL HELICOPTER COLLECTER VISIT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:23:19:1625316799-tn-dgl-02-kodaikanal-helipad-collecter-visit-vs-spt-tn10030-03072021171826-0307f-1625312906-32.jpg)
KODAIKANAL HELICOPTER COLLECTER VISIT
இந்நிலையில் இன்று (ஜுலை 03) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆய்வின்போது வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மேலும் பள்ளங்கி பகுதியில் அமைந்துள்ள குளிர் பதன கிடங்கையும் பார்வையிட்டு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.