தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் மூடப்பட்டுள்ள ஸ்கேன் அறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை - Dindigul

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையை உடனடியாக திறந்துவைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kodaikanal

By

Published : Mar 27, 2019, 10:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மேல்மலை-கீழ்மலை கிராமங்களில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கிராம மக்கள் சிகிச்சைப் பெற அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் உள்ளது.

தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைகளுக்கு ஸ்கேன் வசதி இல்லாததால் தேனி, மதுரை , திண்டுக்கல் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் நிலையுள்ளது. இதனால் பலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால், இங்கு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் (CT SCAN ) வசதி இருந்தும் செயல்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து கேட்டபோது அமைச்சர் திறந்து வைக்க சிடி ஸ்கேன் (CT SCAN ) அறை காத்திருக்கிறது என்ற பதில் கிடைத்தது. இந்த ஸ்கேன் வசதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவர்.

எனவே, காலம் தாழ்த்தாமல் சிடி ஸ்கேன் வசதியை உடனே செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ABOUT THE AUTHOR

...view details