தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடக்கம் - விலை சரிவால் விவசாயிகள் வேதனை - கொடைக்கானல்

கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடங்கியது. விலை வீழ்ச்சியால் அடிப்படை ஆதார விலையை அரசு நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடக்கம்
கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடக்கம்

By

Published : Oct 1, 2021, 7:13 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் தற்போது வெள்ளைப்பூண்டு அறுவடைப் பருவக்காலம் தொடங்கியுள்ளது.

மலைப் பகுதிகளில் முக்கிய விவசாய விளை பயிராக இருப்பது வெள்ளைப்பூண்டு. கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டு புவிசார் குறியீடு பெற்றது.

ஆனால், வெள்ளைப்பூண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாகக் கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை பெய்தது. இந்நிலையில், தற்போது வெள்ளைப்பூண்டு அறுவடைப் பருவக்காலம் தொடங்கியுள்ளது.

போதிய மழை இருந்த காரணத்தினால் கொடைக்கானலில் வெள்ளைப்பூண்டு மகசூல் அமோகமாக இருந்தது. கடந்தாண்டு வெள்ளைப்பூண்டுக்கு அதிகபட்ச விலை கிடைத்தது. ஒரு கிலோ பூண்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.

இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் குறிப்பாக பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, மன்னவனூர் ,கவுஞ்சி, கிளாவரை, போளூர், உள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வரை பூண்டு பயிரிடப்பட்டு உள்ளது. நல்ல மகசூலும் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட மிக மோசமான அளவிற்குப் பூண்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு அறுவடை தொடக்கம்

ஒரு கிலோ பூண்டு 100 ரூபாய்க்கும் கீழாக விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளனர். புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் பூண்டை நிலையான விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு நல்ல விலை கிடைத்த காரணத்தினால் மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுவீச்சில் வெள்ளைப்பூண்டைப் பயிரிட்டனர். 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு இந்த வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.

போதிய அளவு மழை இருந்தும், நல்ல மகசூல் கிடைத்தது .ஆனால் கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலையில் 100 ரூபாய்க்கும் கீழாக வெள்ளைப் பூண்டு ஒரு கிலோ விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 20 முதல் 60 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விதைப் பூண்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, தமிழ்நாடு அரசு வெள்ளைப் பூண்டுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details