தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானலும் அதற்கு விதிவிலக்கில்லை. சென்னை சென்று வந்த கொடைக்கானல் பகுதி வனச்சரகருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
கொடைக்கானலில் வன அலுவலகம் தற்காலிகமாக மூடல்! - கரோனா வைரஸ்
திண்டுக்கல்: கொடைக்கானலில் வனச்சரகர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட வன அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது .
corona
இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்று கரோனா பரிசோதனை செய்தார். அதில் இவருக்கு கரோனா இருப்பது உறுதியானதால், தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இவரைத் தொடர்ந்து மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் அமைந்துள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று!