திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது, பள்ளி மற்றும்கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைமுன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறல்!
திண்டுக்கல்: காட்டு தீ காரணமாக கொடைக்கானல் கோக்கேர்ஸ் வாக் சுற்றுலா தளத்தில் நகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குறிஞ்சி மலர் பூங்கா சேதமடைந்தது.
இந்நிலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மரங்கள் கருகி காணப்படுகிறது. இதனால் திடீரென நேற்று இரவு முதல் கோக்கர்ஸ்வாக் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால் அரிய வகை மரங்களும், குறிஞ்சி மலர் பூங்காவும் எரிந்து நாசமாகியுள்ளது. இன்றும் காட்டு தீ தொடர்வதால் தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.எனவே காட்டு தீயை விரைந்து அணைக்க சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .