திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடைபெறும். இதனை காண்பதற்காகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் நிகழச்சியில் பங்கேற்றனர்.
இன்று தொடங்கிய கண்காட்சி மே 29 வரை நடைபெறுகிறது. பிரையன்ட் பூங்காவில் நடைபெறும் மலர்க்கண்காட்சியில் சுமார் 25 வகை மலர்கள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்குகின்றன. மேலும் 3000 தொட்டிச்செடிகளும், வெளிநாட்டு மலர்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி இந்த மலர்க் கண்காட்சியை ஏற்பாடு செய்த வனத்துறையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது பாஜக புகார்