ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் திடீர் காட்டாற்று வெள்ளம் - மூங்கில் காடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பள்ளங்கி அருகே இருக்கக்கூடிய மூங்கில் காடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்
கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்
author img

By

Published : Jan 2, 2022, 2:28 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்றிரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே இருக்கக்கூடிய பள்ளங்கி மூங்கில் காடு பகுதியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்தக் காட்டாற்று வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வரக்கூடிய மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆற்றை கடக்க முடியாமல் தவித்தனர்.

அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பாலம் கட்டி தரவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details