திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோம்பை காடு, வெள்ளக்கெவி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் செய்யப்படுகிறது. பொதுவாக ஏலக்காய் பயிர் விளைச்சலுக்கு இரண்டு வருட விவசாயம் காலமாகும்.
தற்போது ஏலக்காய் விவசாயத்திற்கு ஏற்றவாறு கொடைக்கானல் மலை பகுதியில் நிலவும் தட்பவெட்பநிலை உள்ளதால் ஏலக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்நிலையில், அறுவடைக்கு தயாரான நிலையில் ஏலக்காய்கள் விளைந்துள்ளன. ஆனால், கொடைக்கானலில் பதப்படுத்தும் கிடங்கு இல்லாததால் ஏலக்காய்கள் வெயிலில் காயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.