திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளான எரிசாலை, பிரையண்ட் பூங்கா பகுதி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு இ-டாய்லெட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.
இந்த இ-டாய்லெட் கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில், சுகாதாரமற்றதாகவும் இருக்கின்றன. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கழிப்பறை வசதியின்றி பெரும் அவதியடைந்துவருகின்றனர்.
கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் கழிப்பறைகளைச் சுற்றிலும் திறந்தவெளி கழிப்பிடமாக அந்தப் பகுதி மாறிவருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
சேதமடைந்து கிடக்கும் இ-டாய்லெட் கழிவறைகள் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் அனைத்து பகுதிகளில் கழிப்பிட வசதி செய்துதர வேண்டும், அதேபோல சேதமடைந்து காணப்படும் இ-டாய்லெட் கழிப்பறைகளைப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
திண்டுக்கல்: குமரியில் கழிப்பறை வசதியின்றி அல்லாடும் சுற்றுலாப் பயணிகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?