திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே புலியூர் கிராமம் உள்ளது. இங்கு உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ், பலாப்பழம், ஆரஞ்சு போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்துவருகின்றனர். இதனிடையே மலைப்பகுதிகளிலிருந்து உணவு தேடிவரும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்திவருகின்றன.
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் தொடர்ந்து 13-க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதிக்கு இரவு நேரங்களில் வந்து விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள செடி, கொடிகளைச் சேதப்படுத்தி பலாப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களைத் தின்றுவருகின்றன. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்டும்படி வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூணாறில் மீண்டும் படையப்பாவின் அட்டகாசம் ஆரம்பம்!