தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
கரோனா தடுப்பூசிக்கு ஆர்வம்காட்டும் கொடைக்கானல் மக்கள் - Dindigul district news
கொடைக்கானலில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளுக்கு நாள் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டுவதால் கூடுதல் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானலில் கரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்
தொடர்ந்து கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துவந்தது. இதனைத்தொடர்ந்து கொடைக்கானலில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளுக்காக பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டிவருகின்றனர். இதனால், கூடுதல் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.