தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழல் - Tourists Visit Kodaikanal

கொடைக்கானலில் காலநிலை மாற்றத்தால் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 16, 2022, 3:25 PM IST

Updated : Dec 16, 2022, 3:50 PM IST

கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழல்

திண்டுக்கல்:மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பகல் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.16) காலை முதலே வெயில் நிலவி வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மலை முகடுகள் அனைத்தும் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கிறது.

தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியாக உள்ள கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் மலைமுகடுகள் அனைத்தும் மேகங்கள் சூழ பிரமாண்டமாக காட்சியளித்து வருகிறது.

மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களை கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மனதை மயக்கும் விதத்தில் இந்த காட்சிகள் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் இதனைக் கண்டு ரசித்து அடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் போக்குவரத்து விதியை மீறுவோர் கவனத்திற்கு!

Last Updated : Dec 16, 2022, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details