திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் மேல்மலை பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் கேரட் பயிரிடப்பட்டு வருகிறது.
கேரட் விதை விதைத்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கடந்த மூன்று மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கேரட் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக மலைகிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வாழைக்காட்டு ஓடை, அடிசரை உள்ளிட்ட மலை கிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.