தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரட் நல்ல விளைச்சல்: மகிழும் கொடைக்கானல் உழவர்கள்

கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரிப்பால் அப்பகுதி உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

KODAIKANAL CARROT CULTIVATION
KODAIKANAL CARROT CULTIVATION

By

Published : Aug 4, 2021, 8:31 AM IST

Updated : Aug 4, 2021, 8:39 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. தற்போது கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, பீட்ரூட், கேரட் உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகின்றன.

தொடந்து கொடைக்கானல் மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். தொடர்ந்து கொடைக்கானலில் பெரும்பாலான உழவர்கள் மருத்துவ குணம் அதிகம் கொண்ட கேரட்டை பயிரிட்டுள்ளனர்.

அரசு உதவுமாறு உழவர்கள் கோரிக்கை

கேரட் வேளாண்மைக்கு ஏற்ப மழை பெய்ததால் நல்ல விளைச்சலும் அடைந்துள்ளது. கிலோவிற்கு 40 ரூபாய் முதல் விற்பனையாவதாக உழவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களிடமிருந்து வியாபாரிகள் நேரடி கொள்முதல் மேற்கொள்ள அரசு உதவ வேண்டுமென உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அவ்வப்போது மழை: வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு

Last Updated : Aug 4, 2021, 8:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details