திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சீசனை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர நவீன இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் இந்த பேருந்து நிலையத்தை நகராட்சி முறையாக பராமரிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பேருந்துகள் தாமதமாக வந்து செல்கின்றன.
கொடைக்கானல் பேருந்து நிலையம் அவசரத் தேவைக்கு சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல் பேருந்து நிலையம் தனியார் வாகன நிறுத்துமிடம்போல் மாறி வருகிறது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் அவதி