திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்காணப்படும்.
இந்த நிலையில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக 'பிரையண்ட் பூங்கா' உள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை இரண்டாவது சீசன் என அழைப்பர்.
இந்த இரண்டாவது சீசனுக்காக பிரையண்ட் பூங்காவில் புதிதாக காதல் மலர்கள், ரோஜா மலர்கள் மற்றும் அஸ்ட்ரோமேரியா மலர் நாற்றுகள், நடப்பட்டு, அவைகள் அனைத்தும் பூத்து குலுங்கத்தொடங்கியுள்ளன.
2ஆவது சீசனுக்குத் தயாராகும் கொடைக்கானல்... பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள் இப்பூக்கள் இன்னும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து பூத்து, இரண்டாவது சீசனுக்கு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் என எதிர்பார்ப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சீர்காழி அருகே ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் மகா குடமுழுக்கு விழா