தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் 120 நாள்களுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு! - dindigul latest news

கொடைக்கானலில் 120 நாள்களுக்கு பிறகு பூங்காக்கள், படகு குழாம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூங்காக்கள் திறப்பு
பூங்காக்கள் திறப்பு

By

Published : Aug 23, 2021, 1:06 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனடிப்படையில் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள், படகு குழாம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன.

நோய் தொற்று குறைந்த உடன் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலை பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி

ஆனால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், படகு இல்லங்கள், பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானலில் இன்று (ஆக.23) 120 நாள்களுக்கு பிறகு பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்க , செட்டியார் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன.

பூங்காக்கள் திறப்பு

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு படகு இல்லங்கள் திறக்கப்பட்டன. கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கிவரும் இரண்டு படகு இல்லங்கள், கொடைக்கானல் நகராட்சி சார்பில் இயங்கிவரும் ஒரு படகு இல்லம் உள்ளிட்ட மூன்று படகு குழாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

120 நாள்களுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு

சுற்றுலா இடங்களை திறக்க கோரிக்கை

தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும் பூங்காக்களில் பூக்களை ரசித்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களை திறக்க வேண்டுமென சுற்றுலா தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details