தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ஆறு பவுன் வரை நகைக்கடன், விவசாயக்கடன் ஆகியவை தள்ளுபடி என அறிவித்திருந்தார்.
110 விதியின் கீழ் தள்ளுபடி அறிவித்த நிலையில் நகைகளை திரும்ப பெறுவதில் குழப்பம்! - Dindigul, Kodaikkanal news
திண்டுக்கல்: பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன், விவசாயக்கடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தள்ளுபடி அறிவித்த நிலையில் நகைகளை திரும்ப பெறுவதில் கொடைக்கானலில் மக்களுக்கும், வங்கி அலுவலர்களுக்கும் குழப்பம் நிலவிவருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏப். 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நகைக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்தது குறித்து வங்கிகளுக்குச் சென்று பொதுமக்கள் கேட்டால், அரசாணை வங்கிகளுக்கு வந்தால்மட்டுமே நகைக்கடன் திருப்பித் தரப்படும் என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றன.
110 விதியின் கீழ் தள்ளுபடி அறிவித்த நிலையில் நகைகளை திரும்பப் பெறுவதில் கொடைக்கானலில் பொதுமக்கள், வங்கி அலுவலர்களிடையே குழப்பம் நிலவிவருகிறது. எனவே தமிழ்நாடு அரசு பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டு எனக் கோரிக்கை எழுந்துள்ளது.