திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகரின் மத்திய பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது.இந்த ஏரியில் மீன்களை பெருக்குவது, மீன் உற்பத்தி உள்ளிட்ட பணிகளை மீன் வளத்துறை செய்து வருகிறது. தற்போது இணை இயக்குனர் பிரபாவதி , உதவி இயக்குனர் பஞ்சராஜா இவர்களின் தலைமையில் சுமார் 24 ஆயிரம் கெண்டை மீன் குஞ்சுகள் ஏரிக்குள் விடப்பட்டது.
கொடைக்கால் ஏரிக்குள் மீன்களை அதிகரிக்க மீன்வளத்துறை நடவடிக்கை - Natchatra Lake
திண்டுக்கல்: கொடைக்கானல் ஏரிக்குள் மீன்களை அதிகரிக்கும் விதமாக மீன்வளத்துறை சார்பில் 24 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஏரிக்குள் விடப்பட்டன.
மீன்களை அதிகரிக்க மீன்வளத்துறை நடவடிக்கை
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இதுபோல் மீன் குஞ்சுகள் ஏரியில் விடப்பட்டு வருகின்றன. மீன் வளத்துறைக்கு சொந்தமான அலுவலகம் இருந்தும் அலுவலகர்கள் கண்துடைப்புக்காக வந்து இது போன்ற செயல்கள் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: 60 ஏக்கர் ஏரி 20 ஏக்கர் கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்!