கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு டெம்போ வேனில் இளைஞர்கள் சுற்றுலா வந்தனர்.
இவர்கள் கொடைக்கானல் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கேரளா திரும்பினார். வாகனம் கொடைக்கானல் - பழனி சாலையில் உள்ள கூம்பூர் வயல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள்: வேன் கவிழ்ந்து விபத்து - கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள்
திண்டுக்கல்: கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 17 இளைஞர்கள் படுகாயமடைந்தனர் .
Accident
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 17 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த இளைஞர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி மலை சாலையில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருவதால் சாலை ஓரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.