திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2600 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கவுஞ்சியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டுகளில் 9ஆவது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைக்கப்பட்டது.
இதை மீண்டும் மறுவரையறை செய்ய வலியுறுத்தி கோட்டாட்சியர் தலைமையில் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க போவதாகக் கூறி வீடுகளில் கருப்புக் கொடி கட்டினர்.