தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் கருவி வழங்கிய கரூர் எம்பி - திண்டுக்கல் வேடசந்தூர் அரசு மருத்துவமனை

திண்டுக்கல்: வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் கருவி பயன்பாட்டை கரூர் எம்பி ஜோதிமணி தொடங்கிவைத்தார்.

karur mp jothimani
karur mp jothimani

By

Published : Dec 17, 2020, 10:26 PM IST

Updated : Dec 17, 2020, 10:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் வென்டிலேட்டர் கருவி இல்லாமல் இருந்தது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளைக் காப்பாற்ற முதல்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் இல்லாத காரணத்தால் ஆபத்தான நேரங்களில் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் போன்ற அத்தியாவசிய மருத்துவ கருவிகள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று கரூர் எம்பி ஜோதிமணி வேடசந்தூர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். பின்னர் ஆய்வின் அடிப்படையில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வென்டிலேட்டர் கருவியை வழங்கினார். இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கவுதம் கார்த்திக்கை வழிமறித்து செல்போன் பறிப்பு: சிசிடி மூலம் சிக்கிய திருடர்கள்

Last Updated : Dec 17, 2020, 10:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details