திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 150ஆவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அதிமுக பேச்சாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுக என்ற கட்சி இன்று இருப்பதற்கு காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். திமுக ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர் என்று அறிஞர் அண்ணாவே கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கருணாநிதி தனது குள்ளநரி மூளையைப் பயன்படுத்தி, எம்ஜிஆரின் உதவியோடு முதலமைச்சர் பதவி வகித்தார். இவையனைத்தும் வரலாறு.