திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக சார்னகைட், கோண்டலைட், பைராக்சின் கிரானுலைட், அனார்த்தசைட், பெக்மடைப் ஆகிய பாறைகள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்பாறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஒட்டன்சத்திரம், சித்தம்புண்டி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தப் பாறைகள் கிட்டத்தட்ட நிலவில் உள்ள பாறைகள் போன்று இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆகையால் சித்தம்புண்டி பகுதியில் இருந்து பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மண் எடுத்து சந்திரயான் 2 விண்கலத்தின் சோதனை ஓட்ட ஆய்வுக்காக அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக இப்பாறையின் வேதியல் மூலக்கூறு பூமியின் இரண்டாம் அடுக்கான மேண்டிலில்தான் கிடைக்கும். ஆனால் இப்பகுதிகளில் பூமியின் மையப்பகுதியின் பிளவுகளின் மூலம் மேல்பகுதியிலேயே கிடைக்கிறது.