முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாளான இன்று (ஜூன் 3) கொடைக்கானல் நகர திமுக சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, 1000 மரக்கன்றுகளை நட்டனர்.
கருணாநிதி பிறந்தநாள்: கொடைக்கானலில் 1000 மரக்கன்றுகள் - Kodaikanal
திண்டுக்கல்: கொடைக்கானலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கலைஞரின் 98ஆவது பிறந்தநாளில் கொடைக்கானலில் 1000 மரக்கன்றுகள்
துப்புரவு பணியாளர்களுக்கு உணவு
இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கொடைக்கானல் நகர திமுக செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற விழாவில், நகர அவைத்தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்லத்துரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.