திண்டுக்கல்:ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர்களின் 26-ம் ஆண்டு தைப்பூச முதல் மரியாதை மண்டகப்படி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நெல்லையிலிருந்து வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு கொடைரோடு டோல்கேட் அருகே பாரதிய ஜனதாகட்சி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் இராணி கருப்பசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் வெற்றிச்செல்வம், முத்துரத்தினவேல் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், “வரலாற்று சிறப்புமிக்க 26-ஆண்டு மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த விழாவில் கலந்து கொள்ளும் தேவேந்திரகுல சொந்தங்களை வரவேற்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தமாட்டார்கள் என நம்புகிறேன். நாளை வெளிவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் கூடி ஒருமித்த கருத்துடன் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம்.