திண்டுக்கல்:கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் சுமதி. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை குஜிலியம்பாறை பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்து அவர்களுக்கு தின்பண்டங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு நகைகளை கொள்ளையடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு மூதாட்டியிடம் இருவர் பேசிக்கொண்டிருந்ததை ரோந்து பணியில் இருந்த முதன்மை காவலர் பார்த்தசாரதி கவனித்தார்.