தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு சங்க வங்கிகளில் 30 சதவீதம் நகை மோசடிகள் - அமைச்சர் தகவல் - Minister Periyasamy

இதுவரை ரூ.15 கோடி மதிப்பிலான மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பங்குபெற்ற அமைச்சர் பெரியசாமி
சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்

By

Published : Oct 30, 2021, 7:30 AM IST

திண்டுக்கல்: சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நேற்று முன்தினம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு, வளைகாப்பு சீர்வரிசை பொருள்களை வழங்கினார்.

கூட்டுறவு சங்க முறைக்கேடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுக் கடன் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்ற நகை மோசடிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை ஏறத்தாழ ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளன. இதை ஆராய்வதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வில், சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களை அனுப்பாமல் வெளி மாவட்டங்களிலிருந்து அலுவலர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 30 சதவீதம் அளவிற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கூட்டுறவுக் கடன் சங்கம், கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குற்றவியல் நடவடிக்கை

இந்தப் பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடையும்; பணிகள் நிறைவடைந்த பின்னர், இது போன்ற தவறுகள் இனி நடைபெறாது. நகை மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், நிர்வாகதஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தீபாவளி முடிந்ததும் வெளியிடப்படும். எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத்தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details