பழனி பேருந்து நிலையம் எதிரே லலிதா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்திவருபவர் தன்ராஜ். இவர் நேற்று வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலையில் இவரின் வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வீட்டை திறந்த தன்ராஜை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
பழனியில் தனியார் நகைக் கடை உரிமையாளர் கடத்தல் - போலீசார் விசாரணை - திண்டுக்கல் செய்திகள்
திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையம் எதிரே லலிதா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்திவரும் தன்ராஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்
வெகுநேரமாக கணவரைக் காணாமல் தேடிய அவரது மனைவி கீதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார் . பழனி டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் அடையாளம் தெரியாத 5 நபர்கள் வந்ததும், தன்ராஜ் வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி அவரை மிரட்டி அழைத்துச் சென்றதும் பதிவாகியுள்ளன.
மேலும் அப்பகுதியில் சென்றவர்களும் பார்த்ததாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் பணத்திற்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்ததில், நகை உரிமையாளர் தன்ராஜ் திருட்டு நகை வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பாடலூர் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றது தெரியவந்துள்ளது.