திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் உத்திரிய மாதா அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் உஷா தொடங்கிவைத்தார். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது அவை வீரர்களின் கையில் சிக்காமல் துள்ளிச் சென்றன.