திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை பெருமாள் கோவில் பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (27). இவர் திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலையில் வார்டனாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 30) இரவு பணி முடிந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுநாயக்கன்பட்டியிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலை குண்டல் பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.