தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்ற 4 பேருக்கு சிறைத்தண்டனை! - திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்ற 4 பேருக்கு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

Etv Bharatகஞ்சா மற்றும் போதை காளான் விற்ற 4 பேருக்கு சிறை தண்டணை..!
Etv Bharatகஞ்சா மற்றும் போதை காளான் விற்ற 4 பேருக்கு சிறை தண்டணை..!

By

Published : Aug 3, 2022, 4:28 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூர் கிராமப்பகுதியில் வைரவேல் (32),லட்சுமணன் (38),மதன் (24), குணசேகரன் (52)ஆகியோர் பல நாட்களாக கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் பலமுறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக தாங்கள் இந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் எனக்கூறி கடந்த 15.07.22அன்று கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் பரிந்துரையின்படி கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன் முன்னிலையில் ஆறு மாத கால நன்னடத்தை பிணையப்பத்திரம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால், இரண்டு நாட்களிலேயே தங்களது நிலையை மாற்றி மீண்டும் போதைக்காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு 18.07.22அன்று கொடைக்கானல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நால்வர் மீதும் நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய காரணத்தால் ஆறு மாத காலம் பிணையில் வெளியில் வர முடியாத கடுமையான தண்டனை வழங்க தாசில்தார் முத்துராமன் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து அழைத்துச்சென்றார்.

இதையும் படிங்க:நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details