தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து! - 15 பேர் காயம் - ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

dindigul mini van accident news  iyappa devotees van accident in dindigul  ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து  15 பேர் காயம்
ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

By

Published : Dec 21, 2019, 4:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திருவண்ணாமலை மாவட்டம் வள்ளுவாய்ப்பட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது குற்றாலம் வந்து குளித்துவிட்டு அங்கிருந்து பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக தனியார் கல்லூரி அருகே சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கேன் மீது மோதி வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர முதலமைச்சருக்கு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துகள்!

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஒட்டன்சத்திரம் சாலை போக்குவரத்துக் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்ததோடு கவிழ்ந்த வேனை மீட்டு, பக்தர்களை மாற்றுவாகனத்தில் அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details