தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கோடி ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கிய சிங்கப்பூர் ஐடி நிறுவனர்! - கரோனா தடுப்பு பணி

திண்டுக்கல்: சிங்கப்பூரில் ஐ.டி கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவர், கரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

By

Published : May 26, 2021, 8:36 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டில்லி பாபு, சிங்கப்பூரில் ஐ.டி கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 28 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details