தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச கராத்தே போட்டி - 20 பதக்கங்களை அள்ளிய அரசுப்பள்ளி மாணவர்கள்! - திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்

திண்டுக்கல்: சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம், 12 வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

dindigul
dindigul

By

Published : Dec 13, 2019, 9:14 AM IST

சென்னை சாந்தோம் மாண்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7, 8ஆம் தேதிகளில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, கொல்கத்தா, நேபாள், இலங்கை, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி

அதில், திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போட்டியிட்டு 10 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கலபதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி கவுரவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றிருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிகள் எத்தனை? - கணக்கு கேட்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை!

ABOUT THE AUTHOR

...view details