திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் பாண்டி - பத்மாவதி தம்பதி. இவர்களின் மகள் பிரதீபா ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிலம்பம் கற்று வந்தார். அப்போதுமுதல் சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
தற்போது பிரதீபா உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.