திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - கொடைக்கானல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
![முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11400254-574-11400254-1618394841778.jpg)
கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை
இந்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை , மூஞ்சிக்கல் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க:சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து