திண்டுக்கல்:தைத்திருநாளின் மறுநாள் விவசாயிகளின் செல்லப்பிராணியான ஆடு, மாடுகளைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல் ஆனது கொண்டாடப்படுகிறது. அதேபோல், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளித்து வரும் நிலையில் விவசாயிகளின் உற்ற துணைவனான ஆடுகள், மாடுகள் மற்றும் ஜல்லிகட்டுக் காளைகள் ஆகியவற்றை அழகுபடுத்தும் விதமாக கழுத்து, மற்றும் கால்பகுதிகளில் அணியும் மணிகள், நத்தம் அருகே குட்டூர் விலக்கு பகுதியில் தயாரிக்கப்படுகின்றன.
முற்றிலும் தோல்களில் ஆன கழுத்துமணியில் அருகே கலர் கலர் குஞ்சங்கள் அமைத்து கழுத்து மணிகள் தயாரிக்கப்படுகின்றது. இங்கு, களங்காமணி, அரியக்குடிமணி, வழக்காமணி, நார்த்தங்காமணி, வட்டி மாட்டு மணி என பல்வேறு வடிவங்களில் வித விதமாக மணிகள் தயாரிக்கபட்டு வருகின்றன.