தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாம்பழத்திற்கு பதிலாக ‘ஆப்பிள்’ சின்னத்திற்கு வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! - dindugal election campaign

திண்டுக்கல்: பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாம்பழ சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

By

Published : Mar 30, 2019, 12:21 PM IST

திண்டுக்கல் மக்கள்தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்துபாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,"திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் விவசாயி மட்டுமல்ல அடிப்படியிலேயே விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால் விவசாயிகளின் சிரமம் மற்றும் பிரச்சனைகள் குறித்து அவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்” என்றார்.

திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை!

இதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்பதற்கு பதிலாக, ‘ஆப்பிள்’சின்னத்தில் வாக்களியுங்கள் என உளறிவிட்டார். ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டு பாமக சின்னத்தை அமைச்சர் மாற்றி உச்சரித்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details