தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைப்பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கப்பல்விட்டு நூதன போராட்டம்! - காகிதக்கப்பல்

திண்டுக்கல்: கூட்டுறவு நகரில் உள்ள சாலைப்பள்ளத்தில் தேங்கியிருக்கும் மழைநீரில் காகிதக் கப்பல்விட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழை நீர் தேங்கிய பள்ளத்தில் கப்பல் விட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

By

Published : Sep 26, 2019, 8:05 AM IST


திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதனால், மாற்றுப்பாதையாக கூட்டுறவு நகர் சாலையை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் இவ்வழியாகச் சென்றுவருகிறது.

சாலைப்பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கப்பல்விட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

இந்நிலையில், இங்குள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. மேலும், இவ்வழியை பயன்படுத்திவரும் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்துவிடுகின்றனர். குறுகலான இந்தச் சாலைகளின் வழியாக அதிகளவில் தண்ணீர் லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாகச் சரி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தினை மக்களுக்கு எடுத்துரைக்கும் முன்னர், அரசு சாலைகளை சரி செய்திட வேண்டும்.

ஒரு சட்டத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தும் முன்னர் அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்திட வேண்டும் என ஆதங்கத்தை தெரிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் உள்ள பள்ளத்தில் காகிதக் கப்பல்விட்டு போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க : கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி திமுகவினர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details