தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல் அதிகரிப்பு - அலட்சியம் காட்டும் வியாபாரிகள் - popular demand awarencess

திண்டுகல்லில் மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும், ஆட்டுச் சந்தைகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா பரவல் அதிகரிப்பு -  அலட்சியம் காட்டும் வியாபாரிகள்
கரோனா பரவல் அதிகரிப்பு - அலட்சியம் காட்டும் வியாபாரிகள்

By

Published : Apr 23, 2021, 3:46 PM IST

திண்டுக்கல்: செம்பட்டி ஆட்டு சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடு, கோழிகளை வாங்குவதற்கும் விற்பதற்கும், இங்கு கொண்டு வரப்படும்.

கரோனா பரவல் அதிகரிப்பு - அலட்சியம் காட்டும் வியாபாரிகள்

இதையடுத்து, கரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் ஆட்டுச் சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரும் அரசு உத்தரவின்படி முகக்கவசம் அணியவில்லை, தகுந்த இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இறைச்சி வாங்குவதற்கு முண்டியடித்து செல்கின்றனர்.

சந்தையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் சந்தையில் சுகாதார துறையும், காவல் துறையும் வியாபாரிகளையும் பொதுமக்களையும் கண்டுகொள்ளவில்லை. மேலும், செம்பட்டி ஆட்டுச் சந்தை அமைந்துள்ள பகுதியானது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சமலையன் கோட்டை ஊராட்சியாகும். ஆனால் இப்பகுதியில் பஞ்சாயத்து அலுவர்களும் கண்டுக்கொள்ளவில்லை.

ஆட்டுச் சந்தையில் அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சமூக இடைவெளியுடன் அமைப்பதற்கு நேற்று ( ஏப்ரல 22) ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எனவே, மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும், ஆட்டுச் சந்தைகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை காவல்துறை மீது துரித நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் இல்லையெனில் வைரஸ் தொற்றானது அதிக அளவில் பரவும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு உள்ளது.

இதையும் படிங்க: 'வாக்கு எண்ணிக்கை நாளில் அரசியல் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை'

ABOUT THE AUTHOR

...view details