தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் விடுமுறை: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! - கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன.

பயணிகளின் வருகை அதிகரிப்பு
பயணிகளின் வருகை அதிகரிப்பு

By

Published : Oct 2, 2020, 6:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறன.

தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். காந்தி ஜெயந்தி, தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் வாகனங்களின் அணிவகுப்பு அதிகரித்து வருகின்றன.
சோதனைச் சாவடி பகுதியிலிருந்து பெருமாள் மலை பகுதி வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்ட நெரிசலும் அரசு பணியாளர்கள் பற்றாக்குறையால் சற்று சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இ-பாஸ் முறையில் சற்று தளர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் முறையான சோதனையும் செய்யாமல் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details